சமர்ப்பிப்புக்களுக்கான அழைப்பு :2014ஆம் ஆண்டுக்கான பிரசாரம்

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 25ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 10ஆம் திகதிவரை முழு உலகும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கு (GBV) முடிவொன்றை எய்துவதற்கான ஆதரித்துவாதிடலை மேற்கொள்கின்றது. ஆண்களினதும் பெண்களினதும் வாழ்வில் அதிகளவிலான வன்முறைச் செயல்கள் திணிக்கப்படுவதுடன்இ அவற்றைப் புரிபவர்கள் கவனத்திற் கொள்ளப்படாது தண்டனை விலக்களிப்புக் கலாசாரம் ஒன்றில் விடப்படுவதன் காரணமாக இந்த ஆதரித்துவாதிடல் பாரியளவில் முன்னெடுக்கப்படுகின்றது.
இவ்வாண்டின் “பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான16 நாட்கள் செயற்பாட்டை” முன்னிட்டுஇ இலங்கையில் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரானமன்றத்தின் (GBV Forum) அங்கத்தவர்கள் பல்வேறுபட்ட செயற்பாடுகளை நாடுபூராவூம் ஏற்பாடு செய்துள்ளனர்.

பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பானது (WMC) 16 நாட்களைக் கொண்ட இந்த சர்வதேச பிரசாரத்திற்கு Sri Lanka 16 days blog என்ற வலைப்பதிவின் ஊடாகப் பங்களிப்புச் செய்யூம் பொருட்டு உங்களையூம் அழைப்பதற்காக இந்த வாய்ப்பை எடுத்துக் கொள்கின்றது.

16 நாட்கள் பிரசாரத்துடன் தொடர்புடைய உங்களது எண்ணங்கள்இ அனுபவங்கள் அல்லது நாட்டில் இடம்பெறுகின்ற செயற்பாடுகளின் இற்றைப்படுத்தல்கள் (updates) போன்றவற்றை எமக்கு அனுப்பி வையூங்கள். நாம் அவற்றை எமது தளத்தில் மகிழ்ச்சியூடன் பதிவேற்றவூள்ளோம். சித்திரம்இ எழுத்தாக்கம்இ புகைப்படம்இ கட்டுரைகள்இ குறுந்திரைப்படங்கள்இ நேர்காணல்கள்இ கேலிச்சித்திரங்கள்இ ஆவணப்படங்கள் மற்றும் வலையொலிகள் (podcasts) போன்ற உங்களது படைப்புக்களாக அவை இருக்கலாம். அவைவிழிப்புணர்வை ஏற்படுத்தி பால்நிலை அடிப்படையிலான வன்முறைகள் குறித்த ஒருகருத்தாடலுக்கு வழிவகுக்கக்கூடும் .உங்களது பங்களிப்புக்கள் சிங்களம்இ தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வரவேற்கப்படுகின்றன.

உங்களது ஆக்கங்களைஇ விளக்கப்படங்களை அல்லது காணொளிகளை உங்கள் சொந்த இணையஇ வலைப்பதிவூஇ டுவிட்டர் அல்லது முகநூல்தளங்களில் #16days மற்றும் #sl16days ஆகிய சதுரக் குறியீட்டுடன் பதிவிடுவதற்கான விருப்பத்தேர்வை நீங்கள் கொண்டுள்ளீர்கள். உங்களுக்கான அத்தகைய சொந்தத்தளத்தை நீங்கள் கொண்டிராதிருப்பின் நேரடியாக எமக்கு அவற்றை அனுப்பிவைத்தால் நாம் உங்களுக்காக அவற்றைப் பதிவிடுவோம். உங்களது பங்களிப்புக்களை wmcsrilanka@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு Sri Lanka 16 days campaign எனும் விடயத்தலைப்பிட்டு எமக்கு அனுப்புங்கள்.

தினசரி அடிப்படையில் மீறப்படுகின்ற மனித உரிமைகள் குறித்து உலகின் கவனத்தை ஈர்ப்பதற்குஇ இந்த 16 நாட்கள் பிரசாரத்தைவிட சிறந்ததொரு காலப்பகுதி கிடையாது. குறிப்பாகப் பெண்கள் தமது உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவே தம்முடைய அன்றாட வாழ்வைக் கழிப்பதால்இ வீதிகளிலும்இ வீடுகளிலும் அல்லது வேலைத்தளங்களிலும் வன்முறைகுறித்த தொடர்ச்சியான அனுபவங்களைப் பெறுகின்றனர்.

பால்நிலை அடிப்படையிலான வன்முறைகள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதன் மூலம் இத்தகைய இன்னல்களை முடிவூறுத்துவதை நோக்கி நாம் பணியாற்றுவோம். உங்களது ஆதரவூடன் இத்தகவலைப் பரவச் செய்து அதுகுறித்து ஒவ்வொருவரையூம் பேசவைக்க முடியூம்என நாம் நம்புகின்றௌம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s