16 நாட்கள் செயற்பாட்டைக் கொண்டாடுவதற்கு “எக்ட் ஸ்ரீலங்காவின்” (ACT Sri Lanka) மூலம் மக்களை அறிவூட்டுவதற்கான வீதி நாடகம், 2015 – லாஸ்யா பெரேரா

லாஸ்யா பெரேரா, சமூக செயற்பாட்டாளர்

நவம்பர் மாதம் 25ஆம் திகதியன்று அனுஷ்டிக்கப்படுகின்ற பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தைக் கொண்டாடுவதற்கு, இந்த நாட்டைப் போலவே உலகிலுள்ள பல நாடுகளும் முன் நிற்கின்றமை பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் நோக்கத்தைத் திடமாக முன்நிறுத்தியாகும். இந்த தினத்திற்கு சமமாக பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான மன்றம் (GBV Forum) மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான 16 நாட்களைக் கொண்ட செயற்பாடுகளின் ஆரம்ப தினம் கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி கொழும்பு ஹில்டன் ரெசிடென்ஸ் ஹோட்டலில் இடம்பெற்றது. ஆரம்ப தினத்தை அடிப்படையாகக் கொண்டு இடம்பெற்ற அந்த வைபவத்தில் “எக்ட் ஸ்ரீலங்கா” (ACT Sri Lanka) நிறுவனம் மூலம் மக்களை அறிவூட்டுகின்ற வீதி நாடகத்தின் வியத்தகு காட்சி வடிவொன்று முன்வைக்கப்பட்டது. அது “எக்ட் ஸ்ரீலங்கா” நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில ரஸ்நாயக்கவின் படைப்பொன்றாகும்.

இந்த நாடகக் காட்சியில் பால்நிலை சமத்துவத்தை அடிப்படையாக வைத்து பெண் தனது வீட்டினுள் முகங்கொடுக்கின்ற அழுத்தங்கள் தொடர்பிலும், பொதுப் போக்குவரத்தின் போது பெண்கள் அனுபவிக்க நேர்கின்ற பல்வேறுபட்ட முறைகளிலான தொந்தரவுசார் அழுத்தங்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பிலும், தினந்தோறும் பாதைகளில் பெண்கள் மீது இடம்பெறுகின்ற தொந்தரவுகள் தொடர்பிலும் சுட்டிக் காட்டப்பட்டது. அதுமாத்திரமன்றி பெண்ணானவள், பெண்ணாக இருப்பதாலேயே எமது சமூகத்திலுள்ள பெண்கள் மற்றும் பெண்பிள்ளைகள் குறித்து சமூகத்தினுள் இரண்டாம்பட்சமாகப் பார்க்கப்படுவது மற்றும் பாரபட்சங்கள் காட்டப்படுவது தொடர்பிலும் பெண் பற்றி சமூகத்தினுள் வேரூன்றிப் போயுள்ள பழைமை வாய்ந்த மனப்பாங்குகள் தொடர்பிலும் எடுத்துக் காட்டப்பட்டது. அதேவேளை அத்தகைய பழைமைவாதத்தில் வேரூன்றிப் போயுள்ள சமூக மனப்பாங்குகள் பாரம்பரியமாக தொடர்ந்து நிலவி வருவதால் இன்று பெண்கள் முகங்கொடுக்க நேர்ந்துள்ள நிலைமைகள், அத்தகைய மனப்பாங்குகளை மாற்றுவதற்காக வேண்டிய ஆண் தரப்பினரின் பங்களிப்பு மற்றும் மனப்பாங்குகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பாகவும் இந்த நாடக வடிவின் மூலம் தெளிவுபடுத்தப்பட்டது.

பெண்கள் என்ற காரணத்தினால் அவர்கள் சமூகத்தினுள் பல்வேறுபட்ட பிரச்சினையான நிலைமைகளுக்கு முகங்கொடுக்க நேர்வதோடு, சமூகத்தினுள் அவர்கள் தொடர்பாக பல்வேறு வகையிலான மனப்பாங்குகள் நிலவுவதையும் அவதானிக்கலாம். அதாவது பெண்களாக இருப்பவர்கள் வீட்டு வேலைகளைச் செய்துகொண்டு தமது குழந்தைகளைப் பாதுகாத்து வீட்டினுள்ளே முடங்க வேண்டும் என்றும், பெண்களுக்கென்றே ஒதுக்கப்பட்டுள்ள தொழில்கள், விளையாட்டுக்கள் செயற்பாடுகள் இருப்பதாகவும், அவள் ஆணுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகையில் பலத்தாலும் சக்தியாலும் குறைந்தவள் என்றும், ஆண் மூலம் அடிமைப்படுத்தப்படுகின்ற ஒருத்தி என்றும் சமூகத்தினுள் ஆணை உயர்வாகக் கருதி அவள் ஆணுடன் பார்க்கப்படுகையில் பாரபட்சம் காட்டப்பட்டு நடத்தப்பட வேண்டியவள் என்றும் நிலவுகின்ற மனப்பாங்குகளே அவையாகும். இவ்வாறான பழைமை வாய்ந்த மனப்பாங்குகள் காரணமாக பெண்கள் சமூகத்தின் முன்னிலையில் கவனிக்கப்படக் கூடாத ஒரு பாத்திரமாகவே மாறி உள்ளனர். இத்தகைய மனப்பாங்குகள் காரணமாக பெண்கள் எந்தவொரு விடயத்திற்காகவும் சமூகத்தில் முன்வருவதற்கு தயக்கத்தையோ அல்லது பயத்தையோ வெளிப்படுத்துவதோடு, அவ்வாறு முன்வருவதற்கு சமூகத்தின் மூலமும் அவளுக்குத் தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன. மேற்குறிப்பிடப்பட்ட காரணங்களுடன் போரிட்டு பாரம்பரிய மனப்பாங்குகளை உடைத்து முன்னேறிச் செல்கின்ற பெண்களைக் கண்ட மாத்திரத்தில் சமூகம் அவள்மீது காட்டுகின்ற மனப்பாங்கும் ஆண் தரப்பினர் வெளிப்படுத்துகின்ற மனப்பாங்கும் இன்று சமூகத்திற்கு ஏற்றவாறு மாற்றமடைய வேண்டுமென மேலும் அதிகமாக இந்த நாடகக் காட்சியின் மூலம் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை இல்லாதொழிப்பதெனின் பெண்களைப் போலவே ஆண் தரப்பினர்களினதும் பூரண ஒத்துழைப்பு அவசியம் என்பதை சுட்டிக்காட்டுவதற்கும் பெண்களை சமூகத்தினுள் உற்சாகப்படுத்துவதற்கும் நாடக வடிவின் மூலம் மக்களை அறிவூட்டுவதற்குமான சிறந்த திட்டமுறையாக அமைந்ததோடு, பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை இல்லாதொழிப்பதை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்த முடியுமான சிறந்த முறைமையாகவும் இந்த நாடக வடிவைச் சுட்டிக்காட்டலாம்.

பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்காக கொண்டாடப்படுகின்ற 16 நாட்களைக் கொண்ட செயற்பாட்டினுள் கொழும்பை அண்மித்த சில பிரதேசங்களையும், பின்னர் நாடுபூராவும் உள்ள பல்வேறு நகரங்களையும் உள்ளடக்கி வீதி நாடகத்தின் மூலம் மக்களை அறிவூட்டுவதற்கு கபில ரஸ்நாயக்க உள்ளிட்ட ‘எக்ட் ஸ்ரீலங்கா’ (ACT Sri Lanka) நிறுவனத்தின் குழுவினர் எதிர்பார்த்திருக்கின்றனர்.

புகைப்படங்கள்- சஞ்சியா ப்ரௌன், பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பு

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s