அரசியலில் பெண்கள் – சிபில் வெத்தசிங்க

பாராளுமன்றத்தில் 6 % இற்கு மேற்பட்ட பெண்களின் பிரதிநிதித்துவத்தை இலங்கை ஒருபோதும் கொண்டிருந்ததில்லை. தற்போதுள்ள மொத்தப் பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேருள் 13 உறுப்பினர்களே பெண்களாவர். இந்தப் புள்ளிவிபரமானது தென்னாசியாவிலேயே மிகவும் குறைவானதாகும்.
பெண்களுக்கான வாக்குரிமையை 1931ஆம் ஆண்டு வழங்கியதன் மூலம் தெற்காசியாவிலேயே பெண்களுக்கான வாக்குரிமையை வழங்கிய முதல் நாடு என்ற பெருமையை இலங்கை கொண்டுள்ளது. 1960ஆம் ஆண்டு ஒரு நாட்டின் அரச தலைவராக பெண்ணொருவர் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம், உலகிலேயே பெண்ணொருவரை அரச தலைவராக நியமித்த முதலாவது நாடு என்ற பெருமையும் இலங்கைக்கு உரித்தானது. இலங்கையின் அரசியலமைப்பில் பால் அடிப்படையிலான சமத்துவம் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளமையால், அரசியல் சார்ந்த பதவிகளுக்கென தேர்ந்தெடுக்கப்படுவதற்கான உரிமை ஆண்களைப் போன்றே சம அளவில் பெண்களுக்கும் உண்டு. மேலும், அரசியலில் சகல மட்டங்களிலும் பிரதிநிதித்துவம் செய்வதற்கான சம உரிமை பெண்களுக்குண்டு எனக் குறிப்பிடுகின்ற ‘சீடோ’ (CEDAW) சமவாயத்தையும் 1981ஆம் ஆண்டு இலங்கை அரசு ஒப்புறுதிப்படுத்தியுள்ளது.
உத்தரவாதப்படுத்தி உணரப்பட வேண்டிய முக்கியமானதோர் உரிமை இதுவாகும்.

அதேசமயம், பால்நிலைக் கூருணர்வும் பால்நிலை விழிப்புணர்வும் கொண்ட சட்டவாக்கங்களை உறுதிப்படுத்துவதற்குப் பாராளுமன்றத்தில் பெண்கள் அங்கத்துவம் வகிக்க வேண்டியுள்ளமையால், அதற்குச் சமாந்தரமான முறையில் முக்கியத்துவம் மிக்க ஒன்றாகவும் இது அமைகின்றது. பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாட்களைக் கொண்ட பிரசாரத்தின் இறுதி நாளான இன்று சர்வதேச மனித உரிமைகள் தினத்தை நாம் கொண்டாடுகின்றமையினால், 2005ஆம் ஆண்டு பல விவாதங்களைத் தொடர்ந்து வீட்டு வன்முறைத் தடுப்புச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமைக்கு, அந்த உயர் சபையில் ஆண்களும் பெண்களும் அங்கத்துவம் பெற்றிருந்தமையே துணைபுரிந்தது என்ற வரலாற்றை நாம் நினைவுகூர்கின்றோம். இச்சட்டமானது வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்ட அதிகளவான பெண்கள் அவற்றுக்கெதிராகப் பாதுகாப்புக் கட்டளையைப் (Protection Order) பெற்றுக்கொள்வதற்கு உதவியிருக்கின்றது. அத்துடன், நெருங்கிய துணையால் பெண்களுக்கு இழைக்கப்படுகின்ற வன்முறைகளுக்கும், அவர்களுக்கு வீட்டில் இழைக்கப்படுகின்ற வன்முறைகளுக்கும் எதிரான பிரசங்கம் ஒன்றுக்கும் இச்சட்டம் துணைபுரிந்துள்ளது.

1995ஆம் ஆண்டில் பாராளுமன்றமானது இலங்கைத் தண்டனைச் சட்டக் கோவையினுள் தொலைநோக்குமிக்க சீர்திருத்தங்களை உட்புகுத்தியது. பாலியல் வன்முறைகளுக்கான தண்டனைகளை வழங்குதல் மற்றும் பாலியல் தொந்தரவையும் தகா உறவையும் (Sexual harassment and Incest) குற்றச் செயல்களாக அங்கீகரித்தல் பற்றியதாகவே மேற்படி சட்டச் சீர்திருத்தங்கள் அமைந்தன. இருந்தபோதிலும், இடைப்பட்ட ஆண்டுகளில் கிரிஷாந்தி குமாரசுவாமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை முதற்கொண்டு அண்மையில் சேயா என்ற சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்புணர்வு புரியப்பட்டு, கொலை செய்யப்பட்டமை வரை பெண்களை வதைத்த எண்ணற்ற வன்முறைகள் பற்றியதான பாலியல் வன்முறை சார்ந்த பல துன்பியல் சம்பவங்கள் அரங்கேறியுள்ளமைக்கு நாம் சாட்சிகளாக இருக்கின்றோம். இவற்றுள் அறிக்கையிடப்பட்ட மற்றும் அறிக்கையிடப்படாத சம்பவங்கள் என இரண்டு வகையான சம்பவங்களும் உள்ளடங்குகின்றன. அதிகமான பெண்கள் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்ய வேண்டுமென நாம் ஏன் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம் என்பதற்கான மற்றொரு காரணம் இதுவேயாகும். பாராளுமன்றத்தில் அவ்விதம் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்தால்தான் பால்நிலைக் கூருணர்வுசார் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, பெண்கள் தனி மனித கௌரவத்துடனும் வன்முறைகள் இன்றியும் வாழ்வதற்குத் தேவையான வினைத்திறன்மிகு கொள்கைசார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

விளக்கப்படங்கள் – சிபில் வெத்தசிங்க
இது, 16 நாட்களைக் கொண்ட செயற்பாட்டுக்காக பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பினால் விடுக்கப்படும் செய்தியாகும்.

300-2

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s