16 நாட்கள் என்றால் என்ன?

பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான 16 நாட்கள் செயற்பாடு என்பது ஒரு சர்வதேச பிரசாரமாகும். இது 1991இல் பெண்களின் உலகளாவிய தலைமைத்துவத்திற்கான மத்திய நிலையத்தின் (Center for Women’s Global Leadership) அனுசரணையில் பெண்களின் உலகளாவிய தலைமைத்துவ நிறுவனத்தினால் (Women’s Global Leadership Institute) முதன்முதலாகத் தோற்றுவிக்கப்பட்டது. மனித உரிமைகளையும் பெண்களுக்கெதிரான வன்முறைகளையும் தொடர்புபடுத்துவதற்கானதும், அத்தகைய வன்முறைகள் மனித உரிமை மீறல்களாகும் என்பதை வலியுறுத்துவதற்கானதுமான ஒரு குறியீட்டு அடையாளம் என்ற அடிப்படையில் பங்குபற்றுனர்கள் பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு எதிரான சர்வதேச தினமாகிய நவம்பர் 25ஆம் திகதி முதல் சர்வதேச மனித உரிமைகள் தினமாகிய டிசம்பர் 10ஆம் திகதி வரையான காலப்பகுதியை இதற்கென தேர்ந்தெடுத்தனர். சர்வதேச பெண்கள் மனித உரிமைகள் பாதுகாவலர் தினமாகிய நவம்பர் 29, உலக எய்ட்ஸ் தினமாகிய டிசம்பர் 01 மற்றும் மொன்றியல் படுகொலை (Montreal Massacre) நினைவு தினமாகிய டிசம்பர் 06 போன்ற தினங்கள் உட்பட, ஏனைய முக்கிய தினங்களையும்கூட இந்த 16 நாட்கள் காலப்பகுதி புலப்படுத்துகின்றது.

பெண்களுக்கெதிரான சகல வடிவிலுமான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கு அழைப்புவிடுக்கும் பொருட்டு உககெங்கிலுமுள்ள தனிநபர்களாலும் குழுக்களாலும் மேற்கொள்ளப்படுகின்ற ஒழுங்கமைக்கப்பட்டதொரு மூலோபாயமாக, பின்வரும் செயற்பாடுகளின் ஊடாக, 16 நாட்கள் பிரசாரம் பயன்படுத்தப்படுகின்றது;
• பால்நிலை அடிப்படையிலான வன்முறையானது மனித உரிமைகள்சார் பிரச்சினையொன்றாகும் என்ற விழிப்புணர்வை உள்ளூர், தேசிய, பிராந்திய மற்றும் சர்வதேச மட்டங்களில் அதிகரித்தல்

• பெண்களுக்கெதிரான வன்முறைகளை நிறுத்துவதற்கான உள்ளூர் செயற்பாட்டை வலுப்படுத்தல்

• பெண்களுக்கெதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உள்ளூர் மற்றும் சர்வதேச தொழிற்பாடுகளுக்கு இடையே தெளிவான தொடர்பொன்றைத் தாபித்தல்

• புதியதும் வினைத்திறன்மிக்கதுமான மூலோபாயங்களை உருவாக்குவதற்கும், அவற்றைப் பகிர்ந்துகொள்வதற்கும் இயலக்கூடிய, ஒரு மன்றத்தை ஏற்பாட்டாளர்களுக்கு வழங்குதல்

• பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு எதிராக அணிதிரள்வதற்கு உலகம் பூராவுமுள்ள பெண்களின் ஒருமைப்பாட்டை நிரூபித்துக் காண்பித்தல்.

• பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் பொருட்டு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அமுல்படுத்துவதற்கு அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான கருவிகளை உருவாக்கல்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s