Filed under Tamil | பதினாறு நாட்கள்

அரசியலில் பெண்கள் – சிபில் வெத்தசிங்க

அரசியலில் பெண்கள் – சிபில் வெத்தசிங்க

பாராளுமன்றத்தில் 6 % இற்கு மேற்பட்ட பெண்களின் பிரதிநிதித்துவத்தை இலங்கை ஒருபோதும் கொண்டிருந்ததில்லை. தற்போதுள்ள மொத்தப் பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேருள் 13 உறுப்பினர்களே பெண்களாவர். இந்தப் புள்ளிவிபரமானது தென்னாசியாவிலேயே மிகவும் குறைவானதாகும். பெண்களுக்கான வாக்குரிமையை 1931ஆம் ஆண்டு வழங்கியதன் மூலம் தெற்காசியாவிலேயே பெண்களுக்கான வாக்குரிமையை வழங்கிய முதல் நாடு என்ற பெருமையை இலங்கை கொண்டுள்ளது. 1960ஆம் ஆண்டு ஒரு நாட்டின் அரச தலைவராக பெண்ணொருவர் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம், உலகிலேயே பெண்ணொருவரை அரச தலைவராக நியமித்த முதலாவது … Continue reading

பொதுப் போக்குவரத்தில் பாலியல் தொந்தரவு- சிபில் வெத்தசிங்க மூலமான விளக்கப்படம்

பொதுப் போக்குவரத்தில் பாலியல் தொந்தரவு- சிபில் வெத்தசிங்க மூலமான விளக்கப்படம்

பொதுப் போக்குவரத்தில் இடம்பெறுகின்ற பாலியல் தொந்தரவானது இலங்கையில் மிகப் பரவலான பிரச்சினையொன்றாக உருவெடுத்துள்ளது. பொதுப் போக்குவரத்தில் 94% ஆனோர் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. தனியாகப் பிரயாணம் செய்தல், பிரயாணத்தின்போது தூங்குதல், அதிக சனநெரிசல் கொண்ட வாகனங்களில் பயணித்தல் மற்றும் பாலியல் சில்மிஷங்களை முன்வந்து எதிர்க்காமை போன்றன பொதுப் போக்குவரத்தில் பாலியல் அடிப்படையிலான வன்முறைகள் இடம்பெறுவதற்கு பங்களிப்புச் செய்கின்ற சில முக்கிய காரணிகளாகும். எமது 16 நாட்கள் செயற்பாட்டுப் பிரசாரத்துக்கென சிபில் வெத்தசிங்கவினால் உருவாக்கப்பட்ட அடுத்த விளக்கப்படமானது … Continue reading

பிறகொருபோதும் இல்லாத மகிழ்ச்சி

பிறகொருபோதும் இல்லாத மகிழ்ச்சி

(உண்மைச் சம்பவம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டது) கொழும்பு 1973 ஞாயிறு காலை. இலங்கை வானொலியானது அவளுக்குப் பிடித்தமான “சில நாளில் எனது இளவரசன் வருவான்” என்பதனை ஒலிபரப்புகின்றது. அது 1937ஆம் ஆண்டு டிஸ்னி கிளசிக் (Disney classic) இன் வெண்பனியில் இருந்து எடுக்கப்பட்டது. அவளுடைய ஜன்னலுக்கு அருகில் அமர்வதற்கென எழும்புகின்றாள். அத்துடன் தனக்காக அவன் எப்போது வருவான் என்று, அந்த நாள் குறித்துக் கனவு காண்கின்றாள். 1976 இன்றுதான் அந்த நாள். அவளுடைய வசீகரமான இளவரசன் அவளைத் … Continue reading

16 நாட்கள் செயற்பாட்டைக் கொண்டாடுவதற்கு “எக்ட் ஸ்ரீலங்காவின்” (ACT Sri Lanka) மூலம் மக்களை அறிவூட்டுவதற்கான வீதி நாடகம், 2015 – லாஸ்யா பெரேரா

16 நாட்கள் செயற்பாட்டைக் கொண்டாடுவதற்கு “எக்ட் ஸ்ரீலங்காவின்” (ACT Sri Lanka) மூலம் மக்களை அறிவூட்டுவதற்கான வீதி நாடகம், 2015 – லாஸ்யா பெரேரா

லாஸ்யா பெரேரா, சமூக செயற்பாட்டாளர் நவம்பர் மாதம் 25ஆம் திகதியன்று அனுஷ்டிக்கப்படுகின்ற பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தைக் கொண்டாடுவதற்கு, இந்த நாட்டைப் போலவே உலகிலுள்ள பல நாடுகளும் முன் நிற்கின்றமை பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் நோக்கத்தைத் திடமாக முன்நிறுத்தியாகும். இந்த தினத்திற்கு சமமாக பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான மன்றம் (GBV Forum) மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான 16 நாட்களைக் கொண்ட செயற்பாடுகளின் ஆரம்ப தினம் கடந்த நவம்பர் மாதம் … Continue reading

தொழில் புரிவதற்கான உரிமை – பெண்கள், ஆண்கள் மற்றும் பால்நிலைசார் தொழிலாளர்

தொழில் புரிவதற்கான உரிமை – பெண்கள், ஆண்கள் மற்றும் பால்நிலைசார் தொழிலாளர்

டெஹானி ஆரியரட்ன, தெற்காசிய மகளிர் நிதியம் இலங்கையின் பொருளாதாரமானது பெண்களின் முதுகுகளினாலேயே சுமந்து செல்லப்படுகின்றது என்பது இரகசியமான ஒன்றல்ல. அவர்கள் குறைந்த ஊதியம் பெறுகின்ற, பாதுகாப்பற்ற, முறைசாரா தொழிற்துறைகளில் பணியாற்றி வருபவர்களாக மட்டுமன்றி, ஏனையவர்களும் தொழில் புரிவதற்குச் சாதகமான சூழலொன்றைத் தோற்றுவிப்பவர்களாகவும் காணப்படுகின்றனர். அதாவது, சமையல் செய்தல், சுத்திகரிப்புப் பணிகளில் ஈடுபடல், குழந்தைப் பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு போன்ற இன்னோரன்ன பராமரிப்புப் பணிகளில் ஈடுபடுகின்ற தாய்மார்கள், பாட்டிமார்கள், சகோதரிகள், திருமணமாகாத மகள்மார்கள் போன்றோர் தொழிலாளர் படையணி பற்றிய … Continue reading

பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினம், 25 நவெம்பர் 2015

பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினம், 25 நவெம்பர் 2015

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினம் இன்றாகும். பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுக்கும் 16 நாட்களைக் கொண்ட செயற்பாட்டை இன்று நாம் தொடங்குகின்றமையால், பெண்களைப் பீடித்து வருத்துகின்ற மிகப்பொதுவான வன்முறை வடிவங்களுள் ஒன்றாக வீட்டு வன்முறையை நாம் பார்க்கின்றோம். சிபில் வெத்தசிங்க மூலமான எடுத்துக்காட்டுக்கள்.

ஆக்கங்களைச் சமர்ப்பிப்பதற்கான அழைப்பு

ஆக்கங்களைச் சமர்ப்பிப்பதற்கான அழைப்பு

பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கெதிரான 16 நாட்கள் செயற்பாட்டைக் கொண்ட பிரசாரம் 2015: நவம்பர் 25 – டிசம்பர் 10 (உங்களுடைய ஆக்கங்களை 2015 நவம்பர் மாதம் 20ஆம் திகதி அனுப்பிவையுங்கள் ) தவறிழைத்தவர்கள் தண்டனைகளில் இருந்து தப்பி சுதந்திரமாக நடமாடும் கலாசாரமொன்றில் நிகழ்ந்தேறுகின்றதும், தனிநபர் மனித உரிமைகளைத் தகர்த்தெறியத்தக்கதுமான வன்முறைகள் தொடர்பில் பிரதான கவனத்தை ஈர்க்கச்செய்யும் நோக்கில், பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கெதிரான 16 நாட்கள் செயற்பாட்டைக் கொண்ட பிரசாரமானது இப்போதிருந்து இன்னும் ஒரு மாதத்தில் உலகளாவிய ரீதியில் முக்கிய … Continue reading

பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கெதிரான மன்றத்தின் (GBV Forum) கொள்கைக் கருத்தாடல் 2014

பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கெதிரான மன்றத்தின் (GBV Forum) கொள்கைக் கருத்தாடல் 2014

பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கெதிரான 16 நாட்கள் செயற்பாடு (16 Days of Activism) தொடர்பிலான பிரசாரமானது, வெறுமனே பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை முடிவுறுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் குறித்து உலகளாவிய ரீதியிலான விழிப்புணர்வைக் கட்டியெழுப்புவதற்கும், பொதுமக்களின் ஆதரவைப் பலப்படுத்துவதற்குமான ஒரு காலப்பகுதி மாத்திரம் அல்ல. மாறாக, அது பெண்களுக்கு எதிரான சகல வடிவிலுமான வன்முறைகளை இல்லாதொழிக்கும் பொருட்டு ஏற்றங்கீகரிக்கப்பட்ட செயன்முறைகளையும் நடைமுறைகளையும் கொள்கை வகுப்பாளர்கள் மீள வலியுறுத்துவதற்கான ஒரு காலப்பகுதியும் ஆகும். பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்காக … Continue reading

GBV Forum policy dialogue 2014

GBV Forum policy dialogue 2014

The 16 Days of Activism against Gender Based Violence (GBV) campaign is not merely a time to build global awareness and strengthen public support on actions taken to end GBV but it is also a time for policy makers to reiterate the processes and practices adopted to end to all forms of violence against women. … Continue reading

திருநங்கைகளுக்கான நினைவூ கூறல் தினமாக

திருநங்கைகளுக்கான நினைவூ கூறல் தினமாக

இலங்கையில் பெண் ஓரினச்சேHக்கையாளHகள்இ ஆண் ஓரினச்சேHக்கையாளHகள்இ இருபாலுறவூ கொள்பவHகள்இ பால் மாற்றம் செய்து கொண்டவHகள் மற்றும் இலங்கையின் விந்தையான சமுதாயத்தின் சமத்துவமான உரிமைகளை உறுதி செய்வதற்காக உழைக்கும் ஒரேயொரு இலாப நோக்கற்ற நிறுவனமான நுஞருயூடு EQUAL GROUND ஆனது மாறுபக்க வெறுப்பு மற்றும் தப்பெண்ணங்களினால் உயிரிழந்த திருநங்கைகளை நினைவூ கூறும் வகையில் கொழும்பு Goethe கல்வி நிறுவனத்தில் சHவதேச மனித உரிமைகள் தினமான டிசம்பH மாதம் 10ஆம் திகதியை “திருநங்கைகளுக்கான நினைவூ கூறல் தினமாக” அனு~;டித்தது. திருநங்கைகளாக … Continue reading