இது இலங்கையில் நிகழுமா?

இலங்கையில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் பரந்தளவில் காணப்படுகின்றன. வன்புணர்வு, பாலியல் தொந்தரவு, குடும்ப வன்முறை, தகாப் புணர்ச்சி, தாக்குதல், பெண்களுக்கெதிரான ஆபாசம், தேவையற்ற வெளிக்காட்டுதல்கள், வக்கிரமான செயல்கள், பலவந்தப்படுத்தி ஆபாசப் படங்களைக் காண்பித்தல், பலவந்தமான விபசாரம் மற்றும் ஊடக வன்முறைகள் போன்ற விடயங்கள் இலங்கை சமூகத்தில் மேலோங்கிக் காணப்படுகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்தை வழங்குகின்ற, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற, பல்வேறுபட்ட பிரிவுகளான அரச, அரச சார்பற்ற மற்றும் சிவில் சமூகம் ஆகியவற்றின் கவனத்தை இந்த விடயங்கள் ஈர்க்கின்றன. இத்தகைய கவனயீர்ப்பு இருந்தபோதிலும் பெண்களுக்கெதிரான வன்முறைகள் அரச மற்றும் தனியார் துறைகளில் இடையறாது நிகழ்வதுடன், அவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளும் அவற்றுக்கான நிவாரணங்களும் போதியளவினதாகவும் இல்லை.

இலங்கையில் பால்நிலை அடிப்படையிலான வன்முறை என்பது பொது இடங்களில் நிகழ்கின்ற பாலியல் தொந்தரவுகள் முதற்கொண்டு வேலைத்தளம் அல்லது வீடு என்ற அந்தரங்கத்தினுள் இடம்பெறுகின்ற வன்முறைச் செயல்கள் வரையான பரப்பெல்லையைக் கொண்டுள்ளது. சமூகத்தில் யார் அல்லது எந்தக் குழுவினர் ஏனையவர்களைவிட மிகையான அதிகாரத்தைக் கொண்டுள்ளனர், மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைச் செயல்களில் யார் தீவிரமாக ஈடுபட முடியும் போன்ற பிரச்சினைகள் பொருளாதார அதிகாரத்துடன் மட்டுப்படுத்தப்பட்டவையல்ல. மாறாக, அத்தகைய அதிகாரத்தைப் பிரயோகிப்பதற்கு அணுகுவதற்கான சமூக அதிகாரத்தினதும் படிநிலைகளினதும் கருத்தமைவுகளில் அது ஆழமாக வேரூன்றியுள்ளது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், பால்நிலை அடிப்படையிலான வன்முறை எனும் கருத்தேற்பானது பின்வரும் இருவிதமான பார்வைகளைக் கொண்டுள்ளது. சமச்சீரற்ற அதிகாரத் தொடர்புகளுக்கு வெளியே தோன்றுகின்ற வன்முறைகள் சமூகமயமாக்கற் செயன்முறைகளின் விளைவுகளாகும். அதேபோல், பெண்களுக்கெதிரான கட்டமைக்கப்பட்ட வன்முறைகளில் இருந்து பால்நிலை அடிப்படையிலான பாரபட்சம் உருவாவதை, பெண்களுக்கெதிரான வன்முறை விளைவானது ஆயுத முரண்பாட்டின் ஒரு விளைவே எனும் உதாரணத்தின் ஊடாகக் கண்டுகொள்ள இயலுமாய் உள்ளமை.

Leave a comment