பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாட்கள் செயற்பாட்டை முன்னிட்டு ACT Sri Lanka நாடகக் குழுவினரின் நாடகம்

உலகெங்கினும் உள்ள தனிநபர்களும் குழுக்களும் பெண்களுக்கெதிரான சகல வடிவிலுமான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கு அழைப்பு விடுக்கின்ற, பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாட்கள் செயற்பாட்டுக்குரிய (16 Days of Activism) பிரசாரத்திற்கான ஆரம்பத்தை நவம்பர் மாதம் 25ஆம் திகதியானது குறித்து நிற்கின்றது.

இலங்கையில் பால்நிலை அடிப்படையிலான வன்முறை பரந்தளவில் அதிகரித்துக் காணப்படுவதை சான்றுகள் புலப்படுத்துகின்றன. பெண்களும் வளரிளம் பெண்களும் (Women and adolescent girls) பால்நிலை அடிப்படையிலான வன்முறையை அனுப்பவிப்பதற்கான உயரிய ஆபத்தைக் கொண்டுள்ளனர். உதாரணமாக, 4 பெண்களுள் ஒரு பெண் தனது 18ஆவது வயதை அடையும்போது பாலியல் ரீதியிலான துஷ்பிரயோகத்திற்கு உள்ளான அனுபவத்தைக் கொண்டுள்ளவளாகக் காணப்படுகின்றாள். 2013ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட புள்ளிவிபரங்களுக்கு இணங்க, பெண்களையும் சிறுவர்களையும் நோக்கிப் புரியப்படுகின்ற வன்முறை மற்றும் துஷ்பிரயோகச் செயல்கள் குறித்து அதிகளவில் அறிக்கையிடப்படுகின்ற பிரதேசங்களின் பட்டியலில் அனுராதபுர நகரம் முதலிடத்தில் காணப்பட்டது. எனினும் இவ்வருடம் அது குறைவடைந்து குறித்த பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு வரவுள்ளது.

16 நாட்கள் பிரசாரத்தை இலங்கையில் ஆரம்பித்துவைக்கும் பொருட்டு ACT நாடகக் குழுவினர் சமூகத்தை விழிப்புணர்வூட்டும் ஒரு முயற்சியுடன், குறிப்பாக பால்நிலை அடிப்படையிலான வன்முறை தொடர்பில் ஆண்களும் ஆண்பிள்ளைகளும் எவ்வித சகிப்புத்தன்மைக்கும் இடமளிக்கக் கூடாது என்பதற்காக, ‘தன்னார்வத்தொண்டும் பால்நிலை அடிப்படையிலான வன்முறையும்’ (Volunteerism and Gender-Based Violence) எனும் தொனிப்பொருளின் கீழ் அனுராதபுரத்திலுள்ள மதவாச்சிப் பிரதேசத்தில் நவம்பர் மாதம் 25ஆம் திகதியன்று நாடகம் ஒன்றை அரங்கேற்றினர்.

பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான தேசிய மன்றத்திற்கு (GBV Forum) தலைமை தாங்கும் நிறுவனம் என்ற ரீதியில் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியமானது (UNFPA), பால்நிலை அடிப்படையிலான வன்முறை குறித்த பிரச்சினைகளை வெளிக்கொணர்வதற்கான ஆதரித்துவாதிடல், தலைமைத்துவம் மற்றும் வலுவூட்டல் ஆகியவற்றிற்கு ஆதரவளிக்கும் ஒரு முன்னணி ஆதரித்துவாதிடுபவராக உள்ளது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s